அந்த இடுகை ---> சீமானே பதில் சொல்லுங்கள்
//@ மோகன் குமார்
உங்கள் அனைத்தும் சரிதான் அதற்க்கு என்ன தீர்வு நீங்களே சொல்லுங்கள்.//
நீங்கள் இந்தியாவை பற்றி சொன்ன கருத்துகள் தவறு என்று நாங்கள் சுட்டிக் காட்டினால், நீங்கள் அதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறீர்கள்.
சரி தீர்வை சொல்கிறேன். அரசியல் மாற்றம் என்பதே தீர்வு, இது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று . அந்த அரசியல் மாற்றம் என்பது தவறுகளை சுட்டிக்காட்டி வாக்காளர்களை விழிப்புணர்வு செய்வதன் மூலமே அடைய முடியும் . இதை தான் பல அச்சுறுத்தலையும் தாண்டி சில பத்திரிக்கைகள், சீமான் மற்றும் சிலர் செய்கின்றனர். இந்த சிலரையும் அதை செய்யகூடாது என்றால், அது ஜனநாயகமே அல்ல. எப்படி தவறுகளை பேசாமல், அதற்கு தீர்வு கிடைக்கும் ?
//இந்தியாவை எதிர்த்து தமிழ்நாட்டில் ஒரு தீவிரவாத கும்பலை உருவாக்கலாமா?//
அந்த அளவுக்கு செல்ல தேவையில்லை. வாக்கு பெட்டியில் எல்லா தமிழர்களும் நேர்மையாக (?) நல்லவர்களுக்கு (?) ஓட்டு போட்டாலே போதும்.//பத்திரிக்கை காரன் போல் குறை சொல்லியே தப்பித்துவிடலாம் என்று நினைக்கவேண்டாம். என்ன தீர்வு என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்?//
தீர்வுக்காக போராடும் ஒரு சிலரையும் விமர்சிக்கும் நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.//@வானம்
தவறுதான். அவர்களை தேர்ந்தெடுத்த நாமும் தவறானவர்கள்தான். இனி வரும் காலங்களிலாவது அந்த தவறை திரித்திக்கொள்ளலாமே .//
நீங்கள் தவறை உணர்ந்து விட்டீர்கள் , ஆனால் மற்றவர்களையும் அதை உணரச்செய்ய வேண்டாமா ?//உங்கள் அண்ணனை நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் பின்பு தமிழனத்துக்காக போராடலாம்.//
இதற்க்கு எல்லாம் இடைத்தரகர்கள் தேவையில்லை , நீங்களே அவரை கேட்டு (நேரிலோ, அலைபேசியிலோ) எங்களுக்கும் தெரியபடுத்தலாம். (அவர் தமிழ் வலை உலகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை)