Thursday, December 30, 2010

மறுக்கப்பட்ட மறுமொழிகள்

பதிவர் THOPPITHOPPI, அவர் இடுகையில் நீக்கிய என் மறுமொழிகள் கீழே

அந்த இடுகை ---> சீமானே பதில் சொல்லுங்கள்

//@ மோகன் குமார்
உங்கள் அனைத்தும் சரிதான் அதற்க்கு என்ன தீர்வு நீங்களே சொல்லுங்கள்.//

நீங்கள் இந்தியாவை பற்றி சொன்ன கருத்துகள் தவறு என்று நாங்கள் சுட்டிக் காட்டினால், நீங்கள் அதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறீர்கள்.

சரி தீர்வை சொல்கிறேன். அரசியல் மாற்றம் என்பதே தீர்வு, இது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று . அந்த அரசியல் மாற்றம் என்பது தவறுகளை சுட்டிக்காட்டி வாக்காளர்களை விழிப்புணர்வு செய்வதன் மூலமே அடைய முடியும் . இதை தான் பல அச்சுறுத்தலையும் தாண்டி சில பத்திரிக்கைகள், சீமான் மற்றும் சிலர் செய்கின்றனர். இந்த சிலரையும் அதை செய்யகூடாது என்றால், அது ஜனநாயகமே அல்ல. எப்படி தவறுகளை பேசாமல், அதற்கு தீர்வு கிடைக்கும் ?


//இந்தியாவை எதிர்த்து தமிழ்நாட்டில் ஒரு தீவிரவாத கும்பலை உருவாக்கலாமா?//
அந்த அளவுக்கு செல்ல தேவையில்லை. வாக்கு பெட்டியில் எல்லா தமிழர்களும் நேர்மையாக (?) நல்லவர்களுக்கு (?) ஓட்டு போட்டாலே போதும்.

//பத்திரிக்கை காரன் போல் குறை சொல்லியே தப்பித்துவிடலாம் என்று நினைக்கவேண்டாம். என்ன தீர்வு என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்?//
தீர்வுக்காக போராடும் ஒரு சிலரையும் விமர்சிக்கும் நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.

//@வானம்
தவறுதான். அவர்களை தேர்ந்தெடுத்த நாமும் தவறானவர்கள்தான். இனி வரும் காலங்களிலாவது அந்த தவறை திரித்திக்கொள்ளலாமே .//
நீங்கள் தவறை உணர்ந்து விட்டீர்கள் , ஆனால் மற்றவர்களையும் அதை உணரச்செய்ய வேண்டாமா ?

//உங்கள் அண்ணனை நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் பின்பு தமிழனத்துக்காக போராடலாம்.//
இதற்க்கு எல்லாம் இடைத்தரகர்கள் தேவையில்லை , நீங்களே அவரை கேட்டு (நேரிலோ, அலைபேசியிலோ) எங்களுக்கும் தெரியபடுத்தலாம். (அவர் தமிழ் வலை உலகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை)

5 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மறுமொழிகளுக்கு பயந்தவன் நான் இல்லை உங்களை விட கேவலமாக என்னை திட்டியவர் பின்னூட்டத்தை நான் அப்படியே போடும்போது உங்கள் பின்னூட்டத்திற்கு நான் ஏன் பயப்பட வேண்டும். நீங்கள் பின்னூட்டம் செய்த அந்த தமிழ் விட்கேட்டில் கோளாறு அது தானாக ஸ்பாம் ஆகிவிட்டது அதற்காக இப்படியா? உங்கள் பின்னூட்டம் ஸ்பாம்மில் இருந்து பதிவிடப்பட்டு விட்டது. நடப்பை வளருங்கள் நீங்கள் என் நண்பர் எதிரி இல்லை

    ReplyDelete
  3. விளக்கத்திற்கு நன்றி நண்பரே.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அடடா என் பெயர் தான் உங்களுக்குமா? நான் ஒண்ணரை வருடங்களாக "மோகன் குமார்" என்றே எழுதி வருகிறேன். "வீடு திரும்பல்" என்ற என் பிளாகை எட்டி பாருங்கள்.

    ReplyDelete
  5. நண்பா எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடக்கிறது. இருவர் பெயரும் ஒன்று என்பதால் தமிழ மணத்தில் பார்க்கும் போது எனது பதிவுகளுடன் தங்களுடையதும் சேர்ந்து வருகிறது. இந்த லிங்கை பாருங்கள்.

    தங்களுக்கு முன்பிருந்து எழுதுவதால் தங்களை வேறு பெயரிலோ இனிஷியல் சேர்த்து கொண்டோ எழுதுங்கள் என்று நான் சொல்லலாம் தானே! தவறாக எண்ணாதீர்கள். தயவு செய்து மாற்றவும்



    http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D


    // இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்

    ஹைதராபாத் பயண கட்டுரை மோகன் குமார் | பயண கட்டுரை செப்டம்பர் 2010-ல் குடும்பத்துடன் டில்லி செல்வதாக திட்டம் இருந்தது. கல்லூரி கால நண்பன் ...
    வானவில்: சிறுத்தை சினிமாவும், Warrant-ம் மோகன் குமார் | வானவில் மீனவர் துயரம் மீனவர் துயரத்திற்கு பதிவர்களிடம் எழுந்துள்ள எழுச்சி சேர வேண்டியவர்களிடம் சேரும் என நம்புகிறேன். பதிவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அவசியமான ...
    அரசு பள்ளி விழாவில் பேசியது என்ன? மோகன் குமார் புழுதிவாக்கம் அரசு பள்ளியில் நான் பேசியதை பதிவு செய்யுமாறு கேட்ட ஏராளமான நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க (என்னது ஒரே ஒரு ஆள் தான் கேட்டாங்க ...


    அரசு பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி மோகன் குமார் சமீபத்தில் புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓர் விழாவில் "தேர்வுக்கு தயார் செய்வதும், தேர்வு எழுதுவதும்" என்ற தலைப்பில் பேச என்னை அழைத்திருந்தார்கள். உரத்த சிந்தனை என்ற ...
    வானவில்: தஞ்சை: பொன். வாசுதேவன்: காதல் கவிதை மோகன் குமார் மனதை பாதித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பதினேழு வயது மைனர் பெண் புருஷோத்தம் திவேதி என்ற அரசியல் ...
    ஆடுகளம்..மறக்க முடியாத பாத்திரங்கள் மோகன் குமார் இணையத்தில் ஒரு வாரம் கழித்து விமர்சனம் எழுதுவது இடைவேளைக்கு பின் சினிமாவுக்கு போவது போல. இருந்தும் ஒரு நல்ல படம் பார்த்ததை பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்த ...
    மறுக்கப்பட்ட மறுமொழிகள் மோகன் குமார் பதிவர் THOPPITHOPPI, அவர் இடுகையில் நீக்கிய என் மறுமொழிகள் கீழே அந்த இடுகை ---> சீமானே பதில் சொல்லுங்கள் ...

    ReplyDelete